காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்த காதலி, உடனடியாக தமிழகத்திற்கு காதலனை தேடிச் சென்ற போது, அங்கு அவருக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியையும், ஒரு வித சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் குன்னத்தூர் அருகே உள்ள ஆயிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெங்களூரில் இருக்கும் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதே நிறுவனத்தில், ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவரும் வேலை பார்த்து வந்த நிலையில், இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர்.
அதன் பின் இருவரும் காதலர்களாக, கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ளதால், குறித்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் நிறுவனத்தை விட்டு தங்களது சொந்த ஊர் திரும்பி பணிபுரிந்து வந்துள்ளனர்.
அதன் படி அந்த இளைஞனும் திருப்பூர் வந்துள்ளார்.
சொந்த ஊர் திரும்பிய அந்த இளைஞனுக்கு, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருடன், திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், காதலியுடன் சரிவர பேசாமல் இருந்துள்ளார்.
இதனால் அப்பெண், அலுவலக நண்பர்களிடம் இது குறித்து கேட்க, அப்போது அவர்கள் வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் ஆன தகவலை கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாக, தனது காதலனின் திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டி கர்நாடக அரசிடம் அனுமதி பெற்று இருச்சக்கர வண்டியில் குன்னத்தூர் வந்தடைந்துள்ளார்.
தன்னைத் தேடி காதலி சொந்த ஊருக்கே வந்ததை அறிந்த அந்த வாலிபர், உடனடியாக அப்பெண்ணை, நீ உன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுவிடு என்று மிரட்டி அடித்து துன்புறுத்தியுள்ளார்.
பின்னர் அந்த வாலிபரின் குடும்பத்தினர் அந்த பெண்ணிடம் பேசி சொந்த ஊருக்கே செல்லுமாறு கூறிய நிலையில் பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் அந்த பெண்ணும் அழுதுகொண்டே காரில் பெங்களூர் செல்ல முடிவு செய்து கிளம்பியுள்ளார்.
காதலனுக்கு வேறு திருமணம் நடந்த தகவல் அறிந்து வந்த பெண்ணை காதலனே அடித்து உதைத்து திருப்பி அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.