சீனாவில் முதலில் தோன்றியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் தொடர்பான விசாரணையை ஆதாரிக்க பிரித்தானியா அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம், அந்நாடு மட்டும் முன்பே கூறியிருந்தால் இந்தளவிற்கு மிகப் பெரிய பிரச்சனையாக மாறியிருக்காது.
குறிப்பாக அங்கிருக்கும் வுஹான் ஆய்வகத்தின் சோதனை மையத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
இதனால் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.ஆனால் சீனாவே சர்வதேச விசாரணைக்கு எல்லாம் நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறி வருகிறது. பிரித்தானியா அரசு இதுவரை சீனாவின் நடவடிக்கைகளை முற்றிலும் கண்டிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், அவுஸ்திரேலியா பிரதமர் Scott Morrison, சீனாவில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் குறித்த சுயாதீன விசாரணையின் கோரிக்கையை ஆதரிக்குமாறு பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Scott Morrison, அனைத்து ஜி 20 நாடுகளின் தலைவர்களுக்கும் ஒரு சுயாதீன விசாரணைக்கு சீனா ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஆதரிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.
Scott Morrison இது குறித்து கூறுகையில், நான் இந்த வைரஸின் தோற்றம் குறித்த கருத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை, இருப்பினும் நான் அதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
இதனால் அதை அடைவதற்கான சிறந்த வழியை நான் கூறினேன். இந்த வாரம் அனைத்து ஜி 20 தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
இது பற்றி நான் போரிஸ் ஜான்சனிடம் பேசினேன், அவரும் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார் என்பதை உறுதியளிக்கிறேன். இது போன்று இனி மீண்டும் நடக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜான்சனின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர், வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்து கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கேள்விகள் உள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்திலிருந்து சீனா கசியவிட்டதாகவும், அங்கேயும் வைரஸை உருவாக்கியிருக்கலாம் என்ற டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டை, பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் சந்தேகம் எழுப்பினார்.
ஏனெனில், அவர் வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, நான் அதில் எந்த உண்மையான ஆதாரத்தையும் காணவில்லை. உண்மையான ஆதாரங்களைப் பார்ப்போம் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.