திருமணம் செய்தவனுக்கு தான் இல்வாழ்க்கையை சண்டை சச்சரவு இன்றி நகர்த்துவது எவ்வளவு கடினம் என தெரியும்.
ஆணும், பெண்ணும் மட்டும் இல்லற பந்தத்தில் இணைவது தான் இல்வாழ்க்கை என நினைத்துவிட வேண்டாம். கணவன் மனைவி ஓர் வீடு என்றால், அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் உறவினர்கள் எனும் காம்பவுண்ட் சுவரை வலுவாக வைத்துக் கொள்வதும் அவசியம்.
எனவே, திருமணத்திற்கு முன்னர் உடல் ரீதியாக தயார் ஆவதற்கு முன்னர், மன ரீதியாக நீங்கள் எப்படி தயாராக வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்…
பெண்கள் நிறைய பேசுவார்கள். நீண்ட நேரம் ஒரே விஷயத்தை உட்கார்ந்து கேட்கும் பண்பு ஆண்களிடம் அறவே கிடையாது. ஆயினும், நீங்கள் கேட்க தான் வேண்டும். கேட்க பழக தான் வேண்டும்.
உங்கள் துணையிடம் இருக்கும் போது மொபைலை நோண்டாமல் இருக்க வேண்டும். நீங்கள் அவர் மீது தான் கவனம் செலுத்த வேண்டும். மொபைல் நோண்டுவது கவன சிதறலை உண்டாக்கும் என்பதற்காக அல்ல. அவர் அருகில் இருக்கும் போதும் நீங்கள் மொபோலை நோண்டிக் கொண்டிருந்தால் வேண்டாத சந்தேகங்கள் அவர்களது மூளைக்கும் கசியும், பிறகு சண்டை சச்சரவுகள் பிறக்கும். இதெல்லாம் தேவையா??
நீங்கள் பிறந்ததில் இருந்து, உங்களது எதிர்கால திட்டங்கள் என்னென்ன, எதை எல்லாம் முயற்சி செய்தீர்கள், முயற்சி செய்யலாம் என எண்ணி கைவிட்டீர்கள் என ஒன்று விடாமல் கூறிவிட வேண்டும். நீங்கள் ஒரு திறந்த புத்தகமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
பெண்கள் நிறைய விஷயங்களை கூறுவார்கள். அதே போல கூறிய அனைத்தையும் (நீங்கள் கூறியதையும் சேர்த்து..) நினைவில் வைத்துக் கொள்வார்கள்.
எனவே, அவர்கள் கூறியது, நீங்கள் கூறியது என சின்ன சின்ன விஷயமாக இருப்பினும் கூட அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
காலை எழுந்ததும், காலை வணக்கத்துடன் ஓர் ஆசை முத்தமும், இரவு உறங்கும் முன் காதலுடன் ஓர் முத்தமும் இரண்டு வேளை அளித்து வந்தால், உங்கள் உறவு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
அவ்வப்போது இன்ப அதிர்ச்சி அளிக்க மறக்க வேண்டாம். பரிசுகளாக இருக்கலாம், அவர்களுக்கு பிடித்த விஷயாமாக இருக்கலாம், வெளியிடங்களுக்கு கூட்டி வருவதாக இருக்கலாம். ஏதேனும் ஒன்று செய்து மாதம் ஒரு முறையாவது அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வந்தால், உங்கள் இல்வாழ்க்கையில் அதிர்ச்சி இல்லாமல் பயணிக்கலாம்.
சில ஆண்களுக்கு தொட்டு பேசுவது என்றல் வியர்த்து கொட்டும். திருமணமான புதியதில் சற்று கூச்சம் இருந்தாலும், இந்த கூச்சம் நீண்ட நாள் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஓர் காவலனாக இருக்க வேண்டும். பயத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். உங்களுடன் இருக்கும் போது உங்கள் துணை இந்த உலகத்திலேயே பாதுகாப்பான இடத்தில் நாம் இருக்கிறோம் என உணர வேண்டும்.