Loading...
நட்சத்திர பழம் என்பது அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ருசியான பழ மாகும்.
Loading...
இதன் வடிவம் 5 முகப்புகளைக் கொண்ட நட்சத்திர வடிவில் காணப்படும்.
ஊட்டச்சத்து அளவுகள்
- 100 கிராம் நட்சத்திர பழத்தில்
- 34.4 மில்லி கிராம் விட்டமின் சி
- 1 கிராம் புரோட்டீன்
- 133 மில்லி கிராம் பொட்டாசியம்
- 10 மில்லி கிராம் மக்னீசியம்
- 2மில்லி கிராம் சோடியம்
- 61IU அளவு விட்டமின் ஏ
- 3 மில்லி கிராம் கால்சியம்
- 0.1 மில்லிகிராம் இரும்புச் சத்து
- நார்ச்சத்து
- 7 கிராம் கார்போஹைட்ரேட்
- 31 கலோரிகள்(குறைந்த கலோரியை கொண்டது)
நன்மைகள்
- நட்சத்திர பழம் புற்று நோயை தடுக்கிறது என்று நிறைய ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இதிலுள்ள பாலிபினோலிக் செல்களில் ஏற்படும் மியூட்டோஜெனிக் விளைவை தடுத்து கல்லீரல் புற்று நோய் போன்றவை வராமல் தடுக்கிறது.
- இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் குடலை சுத்தப்படுத்தி குடல் புற்று நோய் வருவதை தடுக்கிறது.
- இதில் அதிகளவில் விட்டமின் சி இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் காய்ச்சல், இருமல், அல்சர், தொண்டை புண் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
- எனவே காலையில் உங்கள் ஸ்மூத்தியுடன் இந்த நட்சத்திர பழத்தையும் சேர்த்து குடித்து வந்தால் உங்களின் வெள்ளை அணுக்கள் அதிகமாகி நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- நட்சத்திர பழத்தில் அதிகளவில் பொட்டாசியம், சோடியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது.
- இதனால் இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. இதயத் துடிப்பு, ஆரோக்கியமான இரத்த ஓட்டம் இருப்பதால் இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.
- இது வெறும் 31 கலோரிகளை க் கொண்டு இருப்பதால் உங்கள் எடை குறைக்கவும் உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பின எண்ணத்தை தருகிறது.
- உங்கள் மெட்டா பாலிசத்தை அதிகரித்து தேவையற்ற கலோரிகளை எரித்து எடை குறைப்பை எளிதாக்குகிறது.
Loading...