Loading...
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் பல சரும பிரச்சினைகள் வந்துவிடும்.
குறிப்பாக வியர்வையின் மூலம் வேர்குரு, கட்டிகள்,அலர்ஜி போன்றவை ஏற்படும். இதனால் பெரியவர்கள் விட அதிகம் பச்சிளம் குழந்தைகளே அவஸ்தைப்படுவதுண்டு.
Loading...
அந்தவகையில் கோடை காலத்தில் பச்சிளம் குழந்தையை எப்படி பராமரிக்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
- குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.
- வெயில் காலத்தில் பொதுவாக தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால், குழந்தை மருத்துவரின் அனுமதி பெற்று, பால் குடிக்கும் குழந்தைக்கு, சுட வைத்து ஆற வைத்த தண்ணீரையும் அவ்வப்போது கொடுக்கலாம்.
- குழந்தைக்கு வியர்க்கும் என்பதால், அதிகப்படியான காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைக்க கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே நல்லது.
- ஒரே இடத்தில் படுத்துக்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இடம்மாற்றி படுக்க வைக்க வேண்டும்.
- குழந்தையை தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.
Loading...