Loading...
பொதுவாக நம்மில் பலருக்கு அடிக்கடி உள்ளங்கையில் தோல் உரிவது வழக்கம்.
இது குறிப்பாக வறண்ட சருமம், சூரிய ஒளி தாக்குதல், சொரியாசிஸ், கெமிக்கல் நிறைந்த சோப், க்ரீம்கள், பருவ மாற்றம், அலர்ஜி, அரிப்பு போன்ற காரணங்களால் தான் தோல் உரிகிறது.
Loading...
அதுமட்டுமன்றி பாக்டீரியா தொற்று, நோய் தொற்று, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற காரணங்களாலும் தோல் உரியலாம்.
இதுபோன்ற பிரச்சினையிலிருந்து விடுபட சில எளிய குறிப்புக்கள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- பாலை இலேசாக சூடு செய்து அகலமான குழியுள்ள தட்டில் ஊற்றி அதில் தேன் சேர்த்து கலக்குங்கள். சற்று வெதுவெதுப்பாக இருக்கும் போது கைகளை அந்த நீரில் முக்கிவிடுங்கள். சூடு ஆறும் வரை கைகளை அதில் மூழ்கவிடுங்கள். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்தாலே மாற்றம் நன்றாக இருக்கும்.
- வெதுவெதுப்பான நீரில் உங்கள் இரண்டு உள்ளங்கைகளையும் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு கைகளை சுத்தமான மெல்லிய துண்டில் மென்மையாக துடைக்கவும். சற்று உலர்ந்ததும் வைட்டமின் இ ஆயில் கொண்டு இலேசாக மசாஜ் செய்யவும்.வைட்டமின் இ ஆயிலுக்கு பதிலாக ஆலிவ் எண்ணெயும் கூட பயன்படுத்தலாம். இந்த ஆயில் மசாஜ் உள்ளங்கையை நீண்ட நேரம் ஈரப்பதமாக வைத்து வறட்சி உண்டாவதை தடுக்கும்.
- கற்றாழை மடலாக இருந்தால் அதன் தோலை சீவி அதை தண்ணீரில் போட்டு பத்து நிமிடங்கள் ஊற வைத்து விட்டு பிறகு அதில் இருக்கும் நுங்கு பகுதியை எடுத்து கைகளில் மசாஜ் செய்யவும். இரவு படுக்கும் போது செய்துகொள்ளலாம். ஜெல்லாக இருந்தாலும் அப்படியே பயன்படுத்தலாம். மறுநாள் காலை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடங்கள் உள்ளங்கை வைத்து எடுத்து உலரவிடலாம்.
- வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டி உடனே அதை உள்ளங்கையில் வட்டவடிவமாக தேய்த்து மசாஜ் செய்யுங்கள். உள்ளங்கை முழுவதும் விரல்கள் இடுக்கு வரை ஒரு உள்ளங்கைக்கு 5 நிமிடங்களாவது செலவிடுங்கள். இவை தோல் உரிதலை கட்டுப்படுத்தி அழகிய தோற்றத்தை கொடுக்க உதவும். தோலை கெட்டிப்படுத்தும்.
- ஓட்ஸை பொடித்து வெதுவெதுப்பான நீரில் கலந்து 3 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு நன்றாக கலக்க வேண்டும். இதை அகலமான பாத்திரத்தில் ஊற்றி உள்ளங்கையை அதில் மூழ்க விடவும். பிறகு கைகளை துடைத்து உலர்ந்தது மாய்சுரைசர் தடவி உள்ளங்கைகளை ஈரப்பதமாக்கவும். தோல் உரிதல் பிரச்சனை அதிகமாக இருந்தால் தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் செய்துவரலாம். தோல் உரிதல் படிப்படியாக குறையும்.
- அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி (தேவையெனில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்துகொள்ளலாம்) அதில் 10 நிமிடங்கள் உள்ளங்கைகளை வைத்து எடுங்கள். பிறகு கைகளை மிதமாக துடைத்து உலர்ந்ததும் மாய்சுரைசர் பயன்படுத்துங்கள்.
Loading...