மலையாள நடிகர் பிரித்விராஜ் 58 பேர் கொண்ட படக்குழுவுடன் ஜோர்டான் நாட்டில் உள்ள பாலைவனத்தில் சிக்கிக்கொண்டுள்ளார். கடந்த நாட்களாக அங்கிருக்கும் நிலவரத்தை பற்றி இணையத்தில், பிரித்விராஜ் சமீபத்தில் உணவுக்கும் பஞ்சமாக இருப்பதாக கூறி ஒரு நீண்ட பதிவு இட்டிருந்தார்.
இந்த தகவல் அனைவரையும் உருக்குலைத்தது. இதையடுத்து அவரது மனைவி கணவரின் வருகையை எதிர்பார்த்து மாதக்கணக்கில் காத்திருக்கிறார். அவரின் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
இதையடுத்து ஊரடங்கு உத்தரவு அதிகமாகி கொண்டே இருப்பதால், அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவரகள் தாய் நாடு திரும்ப முடியாகாமல் தத்தளித்து வருகிறன்றனர்.
இந்நிலையில்ம், தற்போது அவரது மனைவி சுப்ரியா மேனன் தனது இன்ஸ்டாவில் தற்போது ஒரு பதிவை பதிவிட்டுள்ளர்.
அதில், தினமும் என் மகள் என்னிடம் லாக்டவுன் முடிந்ததா? அப்பா இன்றைக்கு வந்திடுவாரா…? என கேட்கிறாள் இப்பொழுது நானும் எனது மகளும் அவரை காண காத்திருக்கிறோம்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதை படிக்கும் அனைவரது மனமும் வேதனை அடைகிறது. விரைவில் அவர் பத்திரமாக வீடு திருப்புவார் கவலைப்படவேண்டாம் என மனைவி சுப்ரியா மேனனுக்கு ஆறுதல் கூறிவருகின்றனர் இணையவாசிகள்.