கடந்த 24 மணித்தியாலத்தில் அடையாளம் காணப்பட்ட 11 கொரோனா நோயாளர்களும் வெலிசர கடற்படை சிப்பாய்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கடற்படை சிப்பாய்கள் 404 பேர் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடபப்டுகின்றது.
நோய் தொற்றுக்குள்ளான கடற்படை சிப்பாய்களுக்கு நெருக்கமாக செயற்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆகும்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை சிப்பாய்கள் மற்றும் அவர்களுக்கு அருகில் செயற்பட்டவர்களின் மொத்த என்னிண்ணை 437ஆகும்.
இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 835 பேர் பதிவாகிய நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரையில் வைத்தியசாலைகளில் 586 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உறுதி செய்யப்படாத மற்றும் சந்தேகத்திற்குரிய நோயாளிகளின் எண்ணிக்கை 135 என தொற்று நோய் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நிலையில் 240 பேர் வீடு திரும்பியுள்ளனர்.