தமிழகத்தில் 17 வயது மாணவி உடல் முழுவதும் காயங்களுடன் வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தின் மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மகள் பெயர் மௌனிகா (17). இவர் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் இன்று சடலமாக கிடந்தார் மௌனிகா, அவரது உடலில் ஏராளமான காயங்கள் தென்பட்டன.
இன்று காலை வயலுக்கு சென்ற கிராம மக்கள் மௌனிகாவின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த பொலிசார் மௌனிகாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மௌனிகா எப்படி இறந்தார் என்பது மர்மமாகவே உள்ள நிலையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்றுமுதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் மௌனிகாவின் மரணமும் நிகழ்ந்துள்ளதா என்ற சந்தேகமும் பலருக்கு எழுந்துள்ளது.