Loading...
இன்றைய காலக்கட்டத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று ஆஸ்மா. ஆஸ்துமா உள்ளவர்கள் சில உணவு பொருட்களை சாப்பிட்டதும் அதன் பாதிப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு எல்லா பொருளுமே சரியானது அல்ல.
Loading...
இப்பிரச்சினை உள்ளவர்களுக்கு சில உணவுபொருட்கள் சாப்பிடக்கூடாது. அது எந்தெந்த உணவுப்பொருள் என்பதை பார்ப்போம்
- உலர்ந்த திராட்சையில் பதப்படுத்துவதற்கு ஒரு விதமான சேர்க்கப்படும் ரசாயணங்கள் ஒன்று ஆஸ்துமா நோயாளிகளுக்கு பெரும் பிரச்சினையை கொடுத்து விடும். அடிக்கடி சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது.
- இந்த உலர்ந்த பழங்களில் பொட்டாசியம் சல்பேட் சோடியம் சல்பேட் போன்ற காரணிகள் இருப்பதால் இது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.
- சல்ஃபேட் என்பது ஒருவகை கெமிக்கல் வகைகளாகும். பீர் மற்றும் ஒயின் குடிக்கும் பொழுது இருமல் இளைப்பு உங்களுக்கு வருகிற மாதிரி இருந்தால் மீண்டும் சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
- தொடர்ந்து இதை நீங்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணீர் வடிதல் தும்மல் இளைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
- புதிதாக பிடித்த மீன்களை சாப்பிடலாம். ஆனால் அதிக நாள் ஊற வைக்கப்பட்ட மீன்கள், பதப்படுத்தப்பட்ட மீன் வகைகளில் சல்பைடு அதிகமாக இருப்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும். ஆஸ்துமாவின் வீரியம் அதிகமாக மூச்சு திணறல் தும்மல் இருமல் கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் அதிகமாக ஏற்பட்டு விடும்.
- ஊறுகாய் உங்களுக்கு அதிகமாக பிடிக்கும் என்றால் நிச்சயம் ஆஸ்துமா இருப்பவர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஊறுகாயில் அதிகமாக சல்பேட் கலந்திருப்பார்கள். இது பிரச்சினையை இன்னும் அதிமாக்கிவிடும்.
- பாக்கெட் உணவுகள் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவை ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
- பதப்படுத்தப்பட்ட செர்ரி பழத்தில் சில சாயங்கள் பூசுவார்கள். இது சிவப்பாகவும், பளபளப்பாகவும் இருக்கும். ஆனால் இது ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் உண்பதை தவிர்க்க வேண்டும். பதப்படுததப்பட்ட செர்ரி பழத்தை சாப்பிடுவதால் அதில் உள்ள ஜூசை குடிப்பதினாலும் ஆஸ்துமா நோய்க்கு பல பிரச்சனைகள் ஏற்படும்.
- சில உணவுப் பொருட்கள் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அதை தவிர்ப்பது நல்லது.
- முடிந்தவரை செயற்கையான உணவு பொருட்களை தவிர்த்து வந்தாலே ஆரோக்கியமாக வாழலாம்.
Loading...