முதுகுவலிக்காக மருத்துவமனைக்கு சென்ற நபரை ஸ்கேன் செய்த போது உடலில் 3 கிட்னிகள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பிரேசில் நாட்டை சேர்ந்த 38 வயதான நபர் ஒருவர் முதுகுவலிக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரின் உடலை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.
அதில் அவருக்கு சகஜமான முதுவலிதான் என்றும், பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் ஸ்கேனில் ரிப்போர்ட்டில் அவருக்கு 3 கிட்னிகள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அவரின் இடது புறம் ஒரு கிட்னியும், வலது புறம் 2 கிட்னிகள் இருந்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த மருத்துவர்கள், நமது உடலில் உள்ள 2 கிட்னிகளும் சிறிய குழாய் வழியாக சிறுநீரகப்பையை அடையும். ஆனால் அவருக்கு உள்ள 3 வது கிட்னி எந்த ஒரு குழாய் வழியாகவும் இல்லாமல் நேரடியாக சிறுநீரகப்பையில் இணைந்துள்ளது.
ஆனாலும் அந்த நபருக்கு கிட்னி சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் இன்றி அனைத்து உறுப்புகளும் நன்றாக செயல்பட்டு வருகிறது.
இதேவேளை, இந்த மாதிரியான நிகழ்வுகள் கரு வளர்ச்சியின் போது நடக்க வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், முதுகுவலிக்காக மருத்துவமனைக்கு சென்ற நபருக்கு மூன்று கிட்னி கண்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.