Loading...
உடும்பை பிடித்து கொன்று டிக் டாக்கில் வீடியோ செய்து அனுப்பிய மூன்று இளைஞர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட காத்தான் விடுதி சேர்ந்த பிரபு, ரமேஷ், சூரி ஆகிய மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
144 தடை உத்தரவில் வனவிலங்குகளுக்கு எந்தவித ஒரு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.
Loading...
எனினும், இந்த மூன்று இளைஞர்களும் தைலமர தோப்பில் இரண்டு உடும்புகளை பிடித்து அதனை டிக்டாக்கில் வெளியிட்டு உள்ளனர்.
மேலும் அதைக் கொன்று சாப்பிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, தற்போது மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மூவருக்கும் தலா 3 வருடம் தண்டனை உறுதி என்பதும் தெரிய வந்துள்ளது.
Loading...