அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்சுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த இராணுவ வீரர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் துணை ஜனாதிபதிக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க துணை ஜனாதிபதியின் ஊடக செயலாளர் கெட்டீ மில்லர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டிருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோருக்கு வெள்ளை மாளிகையில் தினசரி வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜனாதிபதியை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில் மாநில அரசுகள் மீள இயக்கத்திற்கு திரும்பி வருகின்றன.
சமயத் தலைவர்களை சந்திப்பதற்காக பென்ஸ் லோவாவிற்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த நிலையில் விமானப்படை வீரர்கள் இருவர் மற்றும் மைக் பென்சின் குழுவிலிருந்த 06 பேர் வோஷிங்டன் டீ.சியில் திடீரென விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர்.