மர்ம தேசத்தின் மர்ம மனிதர் என அழைக்கப்படும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், சீன அதிபர் ஜி ஜின் பிங்குக்கு திடீரென கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தனது கடிதத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், அதை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்காக சீன அதிபரைப் பாராட்டியுள்ளாராம் கிம் ஜாங் உன்.
சீனாவின் பேருதவிதான் வட கொரியாவை உயிர்ப்புடன் வைத்துள்ளது. எனவே சீனாவுக்கு ஒரு பாதிப்பு என்றால் அது வட கொரியாவுக்கும் சேர்த்துதான் என்பதால் கொரோனா குறித்து வட கொரியாவும் கவலைப்பட்டது.
ஆனால் சீனா இந்த சவாலை முறியடித்து கொரோனாவை தற்போது கட்டுக்குள் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், பொருளாதாரமும் சரியாமல் பார்த்துக் கொண்டதால் கிம்முக்கு நிம்மதியாகி விட்டதாம்.
பொருளாதார ரீதியில் உலக நாடுகள் வட கொரியாவை முடக்கினாலும் கூட சீனா கை கொடுத்தும், காசு கொடுத்தும் உதவுகிறது.
இதேபோல ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கும் வடகொரிய அதிபர் கிட் ஒரு கடிதம் எழுதியுள்ளார்
“2ம் உலகப் போரில் கூட்டுப் படையினருக்கு வெற்றி கிடைத்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். கூடவே கொரோனாவைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யாவுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கவும்” வாழ்த்தியுள்ளார்.