சீனாவில் எந்த அறிகுறியும் இல்லாமல் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீனாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது,
“சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை.
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 78,046 பேர் குணமடைந்துவிட்டனர். அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்ட 836 தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று முதலில் பரவிய சீனாவின் ஹுபே மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று ஏற்படவில்லை.
கொரோனா வைரஸிலிருந்து பாதிக்கப்பட்டு தற்பபோது தான் சீனா மீண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தியது.
இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுப்பதும் அதனைக் கட்டுக்குள் வைப்பதும் இன்னும் சவாலாகவே உள்ளது என்று சீன அதிபர் ஜி ஜின்பிக் தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.