யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் எனக் கூறப்படும் கிடாரம் மலர் (elephant foot flower) மலர்ந்துள்ளது.
இது குப்பிளான் தெற்கில் உள்ள வீடொன்றில் மலர்ந்துள்ளது.
குறித்த மலர் 15 cm உயரம் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் அம்மலரை பலரும் ஆச்சரியத்துடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
ஒரு அடி உயரத்தில் வளரும் இந்த மலரில் இருந்து பாரிய துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகின்றபோதும், இந்த மலர் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் வீக்கம், பசியின்மை, கல்லீரல் நோய், இருமல், ஆஸ்துமா, ஒற்றை தலைவலி உட்பட்ட நோய்களுக்கு இந்த மலரின் கிழங்கு பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த கிடாரம் மலரானது கடந்த சில வருடங்களின் முன்னர் புத்தளம் பகுதியிலும் பூத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.