வல்லரசு நாடான அமெரிக்கா தற்போது கொரோனா பாதிப்பால் வரலாறு காணாத பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் ஏப்ரல் மாதம் மட்டும் அமெரிக்காவில் சுமார் 2.05 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது.
நேற்று வெளியாகியுள்ள அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தகவல்களின் படி ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் 14.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
இது 2ஆம் உலகப் போர் நடந்த நவம்பர் 1982ஆம் ஆண்டில் கூட 10.8 சதவீதமாகத் தான் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு விதித்தது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இழக்கும் மக்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்தது.
ஆனால் கடந்த ஒரு வாரத்தில் சில வர்த்தகங்கள் இயங்க துவங்கிய நிலையில், வேலைவாய்ப்பின்மை அளவீடு மே மாதத்தில் மேம்படும் எனத் தெரிகிறது.