Loading...
31 வயதே ஆன மலையாள இளம் இயக்குனர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலையாளத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் கோழிபோரு. இப்படத்தை ஜிபித் ஜார்ஜ், ஜினோய் ஜனார்தனன் ஆகிய இரட்டை இயக்குனர்கள் இணைந்து இயக்கி இருந்தனர்.
கொரோனா காரணமாக சில நாட்களிலேயே திரையரங்கில் இருந்து எடுக்கப்பட்டதால், ஊரடங்கு முடிந்த பின்னர் மீண்டும் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.
Loading...
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான ஜிபித் ஜார்ஜ் மரணமடைந்துள்ளார், நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் கண்டுகொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது.
பின்னர் நேற்று மாலை திடீரென மயங்கி விழுந்த ஜிபித்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், இருப்பினும் வழியிலேயே மரணமடைந்தார்.
Loading...