கொரோனா தொற்றின் பீதியே இன்னும் முடியாத போது மக்களை அச்சுறுத்தும் விதமாக ஏடிஎம் மையத்துக்குள் ஆறடி பாம்பு உள்ளே இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே ஏடிஎம் மையங்கள் மக்கள் கண்ணில் படும்படி தான் இருக்கும்,. அதுவும் மக்கள் அடிக்கடி பணம் எடுத்துச் செல்லும் இடமாக இருப்பதால், அங்கு மக்களின் பார்வையும் கவனுமும் இருப்பது வாடிக்கை.
இந்நிலையில், ஒரு ஏடிஎம் மையத்துக்குள் ஒரு ஆறு அடி பாம்பு ஒன்று நெலிந்து கொண்டு, மெஹினில் உள்ள துவாரத்துக்குள் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நல்லவேலையாக யாரும் உள்ளே செல்லாததால் எந்த அசம்பாதவிதமும் நேரவில்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ஏடிஎம் மையத்தில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென அரசு அறிவித்திருந்தும் இப்படி அசால்டாக இருப்பது என்ன அலட்சியம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.