பொதுஜன பெரமுனவும் அதன் தோழமைக்கட்சிகளும் முரண்பட்ட வகையில் நடந்துக்கொண்டாலும் ஐக்கிய தேசியக்கட்சியினர் தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு இன்று பாரிய தொற்று நோய்க்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது, இதன்போது தேர்தல் பிரசார நடவடிக்கை எதனையும் முன்னெடுக்கவேண்டாம் என்று ரணில் விக்ரமசிங்க தமது கட்சியினரை கோரியிருக்கிறார்.
நோய் தொற்று முடிவுக்கு வந்ததும் தேர்தல் குறித்த அட்டவணையின்படி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் சிரேஸ்ட உறுப்;பினர் ஒருவரின் தகவல்படி கொரோன தொற்று முடிவுக்கு வரும்வரை பொறுமை அவசியம் என்று கட்சியினரிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் மனங்களை வெல்லவேண்டியது அவசியம். எனவே அரசாங்கக்கட்சியினர் நடந்துக்கொள்வது போன்று நடந்துக்கொள்ளக்கூடாது என்று ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளதாகவும் சிரேஸ்ட உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.