முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராம அலுவலர் 5000 ரூபா கொடுப்பனவை மோசடி செய்ததாக மக்களால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக உள்ளகக் கணக்காய்வாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க விமலநாதன் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவலை அடுத்து முடக்க நிலை ஏற்பட்டதை அடுத்து அரசாங்கம் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் வயதானவர்கள் , விவசாய ஓய்வூதியம் பெறுவோர் உட்பட பலருக்கு ரூபா 5000 வழங்கியது.
இந்தநிலையில் மேற்குறித்த கிராம அலுவலர் தமக்கு ரூபா 2000 மட்டுமே தந்ததாகவும் மிகுதியை சுருட்டி விட்டதாகவும் மக்கள் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.