டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையின்படி 11 மாவட்டங்கள் டெங்கு நோய் அபாய இடங்களாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுதுறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் அம்பாறை (கல்முனை) ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மே மாதத்தில் முதல் 09 நாட்களில் 100 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, ஏப்ரல் மாதத்தில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 413 ஆகும்.
பெரும்பாலும் மீன்வள படகுகள் மற்றும் கட்டுமான தளங்களைச் சுற்றியே டெங்கு நுளம்புகளின் இன்பெருக்கம் காணப்படுவதாக ஆய்வு விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கட்டுமானத் தள வளாகத்தில் துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வாரமும் ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.