Loading...
திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு பகுதியில் யானையின் தாக்குதலினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று மாலை 4.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பரராஜசிங்கம் அமராவதி (49 வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
Loading...
குறித்த பெண் ஆடு மேய்ப்பதற்காக தங்கபுரம் பகுதிக்கு சென்ற போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
தோப்பூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம். நூறுல்லாஹ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மரணம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...