நடிகை ஆர்த்தி கொரோன பிரச்சினையால் இனி ஒரு வருடத்திற்கு ஒரு ரூபாதான் சம்பளம் வாங்க போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
”கடினமான இந்த கொரோனா காலத்தை நாம எல்லாரும் கடந்து வந்துக்கிட்டே இருக்கோம். கூடிய சீக்கிரத்துல இந்த நிலை மாறும்னு நம்பறேன். சினிமாங்கறது வெறும் பொழுதுபோக்கு மட்டும்தான் இது மக்களுக்கு. ஆனா இந்த சினிமாவையே நம்பி இருக்கற பல்லாயிரம் குடும்பங்களுக்கு இதுதான் வாழ்வாதாரம். இந்த கஷ்டமான காலகட்டத்துல் முன்னணி நடிகர்கள் பலர் தங்களுடைய சம்பளத்தை 25-லிருந்து – 40 சதவிகிதம் வரை குறைச்சிருக்காங்க. என்னோட மனமார்ந்த பாராட்டுக்கள்.
பெரிய பிள்ளையாருக்கு முன்னால சின்ன எலி மாதிரி, சரி சரி ஒத்துக்கறேன், சின்ன இல்லை பெருச்சாளின்னே வைச்சிக்கங்க. என்னோட மனசாட்சிப்படி நானும் ஒரு முடிவை எடுத்திருக்கேன். இனிமே ஒரு வருஷத்துக்கு நான் நடிக்கற எல்லா படத்துக்கும் ஒரு ரூபாய் மட்டும் சம்பளமா வாங்கிக்க போறேன், ஆமா வெறும் ஒரே ஒரு ரூபாய் தான். இதுல ஒரு காரணம் இருக்கு. வெளிலேர்ந்து பாக்கறப்ப சினிமா எப்படி இருக்கும்னு யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் நம்ம முதலாளி. அவர்கள் நல்லா இருந்தா தான், நாம நல்லா இருக்க முடியும். என்னோட சின்ன பங்களிப்பு இதுதான்.
இனி ஆர்த்தி பட்ஜெட் ஜாஸ்தியா இருக்கும்னு யாரும் யோசிக்க வேண்டாம். எந்த கண்டிஷன்ஸ் அப்ளையும் இதுல கிடையாது. ஆனா ஒரே ஒரு சின்ன ரிக்வெஸ்ட் – என்னோட ஒரு சீன் ப்ளான் பண்ணும் போது மட்டும் ஒரு பத்து எக்ஸ்ட்ரா கலைஞர்களுக்கும் சேர்த்து நீங்க வேலை கொடுக்கணும்.
நான் வாங்கப் போறது ஒரு ரூபாதான் – ஆனா அந்த பத்து கலைஞர்களுக்கு ஷேர் பண்ணி கொடுத்தா சந்தோஷம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருவதுடன் அனைவரும் ஆர்த்தியைப் பாராட்டி வருகின்றனர்.
நான் விரும்பும் என் மரியாதைக்குரிய திரைத்துறைக்கு என்னால் முடிந்தது???
உங்களை மகிழ்விப்பதே என் மகிழ்ச்சி ???
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லை என்ற நிலை வேண்டும் ???#spreadinglove #sacrifice #HelpingHands #cinema #love #producer #director #actor pic.twitter.com/j00sWOxZ4d— Actress Harathi (@harathi_hahaha) May 9, 2020