பிரித்தானியாவில் மனைவி குளிக்க சென்ற நேரத்தை வாய்ப்பாக பயன்படுத்திய இலங்கை தமிழர் தமது பிள்ளைகளை கூரான ஆயுதத்தால் தாக்கியதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிழக்கு லண்டனில் உள்ள இல்போர்டில், அவர்களது குடியிருப்பில் வைத்து நடராஜா நித்தியகுமார் தமது 19 மாத மகளான பாவின்யா மற்றும் 3 வயது மகன் நிகாஷ் ஆகியோரின் கழுத்தில் திட்டமிட்டே காயப்படுத்தியதாக வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குழந்தை பவின்யா சம்பவயிடத்திலேயே பலியான நிலையில், சிறுவன் நிகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ஏப்ரல் 26 ஆம் திகதி மாலை சுமார் 6 மணியளவில் நடந்த இச்சம்பவத்தையடுத்து 40 வயதான நித்தியகுமார் தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் படுகாயத்துடன் காப்பாற்றப்பட்டதாகவும் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் இன்று வீடியோ இணைப்பு வழியாக இரண்டாவது முறையாக ஆஜரான நித்தியகுமார்,
தனது இரு குழந்தைகளையும் கொலை செய்ததாக வழக்குரைஞர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அரசு தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர் Jonathan Polnay, தமது மனைவி குளிக்க சென்ற நேரத்தை வாய்ப்பாஅக பயன்படுத்திய நித்தியகுமார், பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
நித்தியகுமார் மீது இரண்டு பிரிவுகளில் கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஜூலை 28 ஆம் திகதி மறு விசாரணை முன்னெடுக்கப்படும் வரை நித்தியகுமார் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவதாக நீதிபதி Nigel Lickley அறிவித்துள்ளார்.