Loading...
நான்கு ஆப்பிளுக்கு ஒரு நெல்லிக்கனி சமம் என்று கூறுவார்கள். குறைந்த விலையில் அதிக சத்துக்களை நெல்லிக்காயை கொடுக்கிறது.
நெல்லிக்கனியில் புளிப்பு, இனிப்பு, துவர்ப்புச்சுவை கொண்ட குளிர்ச்சித்தன்மை உள்ளது.
Loading...
உடல் ஆரோக்கியத்தில் அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நெல்லிக்கனியை குழந்தைகளுக்கு கொடுத்தால் அதிக உஷ்ணம் குறையும்.
நெல்லிக்காயை இப்படி செய்து எடுத்துக் கொண்டால் என்ன பலன் என்பதை பார்ப்போம்
- நெல்லிக்காயை நீரில் கழுவி சுத்தம் செய்து கொட்டையை நீக்கி பொடியாக அரிந்துகொள்ள வேண்டும்.
- அதை நிழலில் உலர வைக்க வேண்டும்.
- சற்று காய்ந்ததும் அதை மிக்ஸியில் விழுதாக அரைக்க வேண்டும்.
- நெல்லிக்காய் ஈரமாக இருக்க கூடாது.
- இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கண்ணாடி பாட்டிலில் அடைத்துகொள்ளவும்.
- நெல்லிக்காயை உலரவைப்பதை பொறுத்து இவை ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
- பொடியை நேரடியாக சாப்பிட விரும்பாதவர்கள் உதிரான சாதத்தில் நல்லெண்ணெயில் கடுகு, உ.பருப்பு சேர்த்து தாளித்து நெல்லிப்பொடி கலந்து சாப்பிட்டு வரலாம்.
- உடல் எடை குறைய விரும்புபவர்கள், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வர வேண்டும் என்று விரும்புபவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் கால் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் நெல்லிப்பொடியை கலந்து குடித்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
- பூண்டு, பச்சை மிளகாய், தனியா, உ.பருப்பு, நெல்லித்துண்டு வதக்கி கறிவேப்பிலை சேர்த்து அரைத்து எண்ணெயில் தாளித்து பயன்படுத்தி சாப்பிடலாம். இவை தோசை, இட்லிக்கு தொட்டுகொள்ள ருசியாக இருக்கும்.
- நெல்லிக்காய் பொடி காய்ச்சல் காலங்களில் இருமல், சளி இருக்கும் போது இந்த சுவை வாய்க்கு நன்றாக இருப்பதோடு காய்ச்சலை போக்கும்.
- நீர் மோர், இளநீர், கற்றாழை சாறு போன்று கோடையை சமாளிக்க நெல்லி மோர் செய்து குடிக்கலாம்.
- 3 நெல்லிக்காய் எடுத்து சிறிதளவு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம், புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை- கைப்பிடி அளவு சேர்த்து அரைத்து 2 சிட்டிகை பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து குடித்தால் சுவை அருமையாக இருப்பதோடு உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
- வைட்டமின் சி நிறைந்த நெல்லியும், ப்ரோபயாடிக் நிறைந்த தயிரிலிருந்து பெறும் மோரும் உடலுக்கு அளவற்ற நன்மைகளை கிடைக்கும்.
- கோடையில் வாட்டி எடுக்கும் சிறுநீர் கடுப்புக்கு நெல்லிக்கனி மோர் சிறந்த நிவாரணமாக விளங்கும்.
- அரைகிலோ அளவுள்ள நெல்லியை சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ½ கிலோ பனங்கருப்பட்டி பாகு காய்ச்சி கசடு நீக்க வேண்டும். கசடு நீக்கியதும் நெல்லியை சேர்த்து 3 டீஸ்பூன் நல்லெண்ணெய்சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவைத்து அடுப்பை அணைக்க வேண்டும். பிறகு 3 தேக்கரண்டி தேன் சேர்த்து இந்த பாத்திரத்தின் வாயை துணி கொண்டு கட்டி நன்றாக குலுக்கி குலுக்கி வைத்து இரண்டு நாட்கள் கழித்து பார்த்தால் நெல்லி துண்டில் தேன் நன்றாக ஊறியிருக்கும். பிறகு நெல்லியை எடுத்து உலர்த்தி எடுத்தால் தேன் நெல்லி தயார்.
- நெல்லியை சுத்தம் செய்து கொட்டை நீக்காமல் முழு நெல்லியையும் ஊசி துளைகளால் குத்திவிடவேண்டும். பனங்கருப்பட்டியை பொடித்து வைத்துக் கொண்டு சுத்தமான கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் மூன்று நெல்லிக்காய்களை சேர்த்து பிறகு 3 டீஸ்பூன் தேன் 1 தேக்கரண்டி பனங்கருப்பட்டி சேர்க்கவும்.
- இதே போன்று நெல்லியுடன் தேன் பனங்கருப்பட்டி சேர்த்து சேர்த்து வந்து இறுதியில் பாட்டிலை மெல்லிய துணியால் கட்டி அவ்வபோது குலுக்கி மூன்று நாட்கள் கழித்து திறந்தால் நெல்லிதுளை வழியாக மொத்த வெல்லமும் தேனும் கலந்து இருக்கும்.
- தினமும் காலையில் தேன் நெல்லி 1 அல்லது தேன் நெல்லி துண்டுகள் 4 என்ற அளவில் சாப்பிட்டால் ரத்தத்தில் இருக்கும் கழிவை வெளியேற்றி ரத்தத்தை சுத்தமடையச் செய்யும்.
Loading...