உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் இலங்கை மக்களின் உபசரிப்பு குறித்து இஸ்ரேலிய பிரஜையான பிரபல ஒளிப்பதிவாளர் Nuseir Yassin காணொளி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
உலகை அச்சறுத்தும் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து விடுபட முயற்சிக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் தாக்கம் காரணமாக முழு இலங்கையும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதன் காரணமாக இலங்கை வந்த பெருமளவு சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பிரபல சுற்றுலா தளமான எல்ல நகரில் பெருமளவு சுற்றுலா பயணிகள் சிக்கியிருந்தனர். அவர் தமது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்பட்டது.
எனினும் சுற்றுலா பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் அவற்றை நிவர்த்திக்க எல்ல மக்கள் எடுக்கும் முயற்சிகள் குறித்து Nuseir Yassin பாராட்டியுள்ளார்.
உலகம் வழமைக்கு திரும்பிய பின்னர் இலங்கையர்கள் நன்றியுடன் நினைவுக்கூறப்பட வேண்டும் என அவர் தனது காணொளியின் மூலம் உலகுக்கு செய்தி ஒன்றை வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவதன் மூலமாகவே அந்த நன்றி கடனை செலுத்த முடியும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 50 நாட்களுக்கு மேலாக இலங்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், சுற்றுலா துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.