கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐயாயிரம் ரூபா விசேட கொடுப்பனவை ஜூன் மாதத்திற்கும் வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் சீரடையாத காரணத்தினால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் இக்கொடுப்பனவை ஜூன் மாதத்திற்கும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மேற்படி கொடுப்பனவு கிடைக்கப்பெற்ற நிலையான நன்மை பெறுனர்கள் ஆவணம், முன்னுரிமை ஆவணம் மற்றும் கிராமிய குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட நன்மை பெறுனர்கள் ஆவணம் ஆகிய ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நன்மை பெறுனர்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலில் குறித்த கொடுப்பனவை கிராம சேவையாளர்கள் நன்மை பெறுனர்களின் வீடுகளுக்கு சென்று வழங்குவர் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.