குருபகவான் வக்ர சஞ்சாரம் இன்று முதல் ஆரம்பமாகிறது. குரு பகவானால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட தேவதை வீட்டுக்கதவை தட்டப்போகிறார். மகரம் ராசியில் சனியோடு சேர்ந்திருக்கும் குரு பகவான் படிப்படியாக விலகி வக்ரகதியில் சஞ்சரித்து தனுசு ராசிக்கு நகர்கிறார்.
தனுசு ராசிக்கு வக்ரமடைந்து திரும்பும் குரு செப்டம்பர் 13ஆம் தேதி முதல் நேர்கதியில் சஞ்சரிப்பார். 120 நாட்கள் குருவின் வக்ர சஞ்சாரத்தினால் இந்த நான்கு ராசிக்காரர்களில் யாருக்கு கோடீஸ்வர யோகம் வரப்போகிறது என்று பார்க்கலாம்.
நவகிரகங்கள் அனைத்தும் தங்கள் சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை சில நேரங்களில் பின்னோக்கியும் செல்லும். ஜோதிட ரீதியாக கிரகங்கள் பின்னோக்கி செல்லும் காலங்களை வக்ர காலங்கள் என்கிறோம்.
நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள். கிரகங்கள் மெதுவாக நகர்வதையே வக்ரகாலம் என்று கூறுகிறோம்.
குரு சூரியனுக்கு 245 டிகிரியில் இருக்கும் போது வக்ரம் பெற்று 115 டிகிரிக்கு வருகின்ற போது வக்ர நிவர்த்தியடையும். சுமார் 120 நாட்கள் வக்ர நிலையில் இருக்கும்.
தனுசு ராசியில் இருந்து கடந்த மார்ச் மாதம் அதிசாரமாக மகரம் ராசிக்கு சென்ற குரு பகவான் இன்று முதல் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார். வைகாசி மாதம் சூரியனுக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவான் ஆவணி மாதம் சிம்மம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது வக்ர நிவர்த்தி அடைகிறார்.
120 நாட்கள் வக்ரநிலையில் சஞ்சரிக்கும் குருபகவான் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களில் யாருக்கு சாதகமான பலனையும் யாருக்கு பாதகமான பலனையும் தரப்போகிறார் என்று பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். வீடு கட்ட தொடங்குவீர்கள் வங்கிக்கடனுதவி கிடைக்கும்.
மனதெல்லாம் மகிழ்ச்சி மத்தாப்பூ பூக்கும். உங்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். உங்களின் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். புதிய பதவிகள் தேடி வரும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள்.
அதே நேரத்தில் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 10 வரைக்கும் உங்க ஜென்ம ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிரமாக செல்லும் காலத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும்.
வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். புதிய பதவிகள் தேடி வரும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வேலையை ஒத்துக்கொள்ளவும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்ளுக்கு வேலைச்சுமை அதிகமாகும். எண்ணெய் பலகாரங்களையே, காரமான உணவுகளையோ வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்க.
கடன் பிரச்சினைகள் உங்களுக்கு தொல்லையை கொடுக்கலாம். எடுத்த காரியத்தை முடிக்க போராட வேண்டியிருக்கும். வேலையில் கவனமாக இருங்க. கர்ப்பிணி பெண்கள் இந்த கால கட்டத்தில் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை சாப்பிடாதீங்க.
பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். தேர்வுக்கு தயாராகும் பிள்ளைகளை பாராட்டி உற்சாகப்படுத்துங்கள்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு கொரோனா லாக் டவுனால் எல்லாமே முடங்கி போயிருந்தது. திடீர் பயணங்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். உறவினர்கள் மூலம் மறைமுக நெருக்கடிகள் வரும்.
பண நெருக்கடி வரும். வட்டிக்கு கடன் வாங்கியிருந்தவர்களுக்கு நெருக்கடிகள் வரலாம். எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். வீண் செலவுகளை தவிர்த்து விடுங்கள்.
வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதரர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த கால கட்டத்தில் பணவரவு அதிகமாக இருக்கும். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. கைமாற்றாக வாங்கியிருந்த கடன்களை திருப்பி கொடுப்பீர்கள். தொலைந்து போன பணம், நகை ஆவணங்கள் திரும்ப கிடைக்கும்.
உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த நண்பர்களை சந்திப்பீர்கள். தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும்.
கொரோனா லாக் டவுனால் டூர் போகமுடியலையே என்று கவலைப்பட்டு வந்த உங்களுக்கு ஜூலை மாதத்தில் நல்ல ரிலீப் கிடைக்கும் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். பயணங்களினால் புத்துணர்ச்சி அதிகமாகும். கஷ்டமான காரியங்களை லேசாக செய்து முடிப்பீர்கள். திருமணம் சுப காரியங்கள் கைகூடி வரும்.