கஞ்சாவுடன் கைதான 26 வயதுடைய பெண்ணிற்கு ரூபா 19900 தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதிமன்று விடுவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை(12) மாலை 4 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையடிக்கிராமம் பகுதியில் 26 வயதுடைய பெண் ஒருவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் துர்நடத்தை தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் உள்ளிட்ட குழுவினர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் புதன்கிழமை(13) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவ்வாறு ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பெண்ணிற்கு ரூபா 19 ஆயிரத்து தொள்ளாயிரம் தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட குறித்த பெண் 108 கிராம் கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.