உலகெங்கிலும் உள்ள பயணிகள் சேவைகள் குறைந்து வருவதால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சர்வதேச பொதிகள் ஏற்றுமதி இறக்குமதி சேவையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, 45 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை மூன்று இலங்கை ஏர்லைன்ஸ் விமானங்கள் சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து நேற்று தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க்கில் உள்ள ஈ.ஆர். தம்போ சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு சென்றன.
இந்த விமானங்கள் இன்று காலை காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மீள திரும்பின.
அந்த அத்தியாவசிய மருத்துவப் பொருட்களில் ஏழு மில்லியன் பாதுகாப்பு முகமூடிகள் மற்றும் இன்னும் சில மருத்துவ உபகரணங்கள் இருந்தன.
பயணிகள் சேவைகள் செயலிழந்த பின்னர் சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க்குக்கு மூன்று விமானங்களை இலங்கை ஏர்லைன்ஸ் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.