கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களில் 121 பேர் குணமடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கடற்படை மேலும் தெரிவித்துள்ளதாவது
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களில் இன்றையதினம் 59 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
குறித்த 59 பேரும் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களாவர்.இதன்படி கடற்படை வைத்தியசாலையில் 44 பேரும்,ஹோமாகம வைத்தியசாலையில்05 பேரும், முல்லேரியாவ வைத்தியசாலையில் 03 பேரும், தொற்றுநோய் பிரிவு வைத்தியசாலையில் 03 பேரும், வெலிக்கந்த வைத்தியசாலையில் இருவரும், இரணவில வைத்தியசாலையில் இருவரும் என மொத்தம் 59 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த 59 பேரும் மேலும் 14 நாட்கள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய தனிமைப்படுத்தப்படுவர்.
இன்றைய தினத்துடன் 121 கடற்படை வீரர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதேவேளை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தகவலின்படி 916 கொரோனா நோயாளிகளில் 480 பேர் கடற்படை வீரர்கள் எனத் தெரிவித்துள்ளது.