கொரோனா தொற்று பாதிப்பில், வைரசின் பிறப்பிடமான சீனாவை விட அதிக பாதிப்புக்களுடைய நாடாகியது. பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 11வது இடத்திலுள்ளது.
சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிர் பலி வாங்கி வருகிறது கொரோனா. இந்நிலையில், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த சீனா, உயிர்பலியையும் தடுத்துள்ளது. சீனாவில் இதுவரை 82,933 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,633 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே சமயம், இந்தியாவிலும் வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், உயிரிழப்பும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
இன்று (16) காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 85,784 ஆக உயர்ந்தது. உயிரிழப்பும் 2,753 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், வைரசின் பிறப்பிடமான சீனாவை முந்திய இந்தியா, அதிக பாதிப்பு பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.