லண்டனில் கொரோனா லாக்டவுன் நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான முக்கிய பணியை செய்த ஊழியர் லொட்டரி மூலம் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ள நிலையில் கர்மா தான் இந்த அதிர்ஷ்டத்துக்கு காரணம் என கூறியுள்ளார்.
Essex-ஐ சேர்ந்தவர் Anthony Canty (33) இவர் மனைவி Katie. Anthony மத்திய லண்டனில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கான நீர் தரத்தை பராமரிக்கும் பணியை கொரோனா லாக்டவும் சமயத்தில் அர்ப்பணிப்புடன் செய்து பொதுமக்களுக்கு உதவியாக இருந்தார்.
இந்நிலையில் Anthony-க்கு EuroMillions லொட்டரியில் £1,000,000 பரிசு விழுந்துள்ளது.
இதையடுத்து சாதாரண நிலையில் இருந்த அவர் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
இது குறித்து Anthony கூறுகையில், சில வாரங்களுக்கு முன்னர் நான் பேருந்தில் சென்ற போது என்னுடன் ஒரு பயணி இருந்தார்.
அங்கு நாங்கள் இருவர் மட்டுமே இருந்த நிலையில் நண்பர்கள் ஆனோம், பின்னர் இருவரும் ஒன்றாக உணவருந்திய போது திடீரென அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்தார்.
இதையடுத்து உடனடியாக நான் எனக்கு தெரிந்த முதலுதவி சிகிச்சை செய்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.
ஐந்து நாட்கள் ஐசியூவில் இருந்த அவர் உயிர்பிழைத்த நிலையில் நான் தான் அவரின் உயிரை காப்பாற்றினேன் என கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
இந்த நல்ல கர்மா தான் எனக்கு இவ்வளவு பெரிய பரிசை லொட்டரியில் பெற உதவியது என நான் நம்புகிறேன்.
நான் லண்டனுக்கு பணிக்கு செல்லும் தான் நேஷனல் லொட்டரி செயலியில் லொட்டரி டிக்கெட் வாங்கியதை எடுத்து பார்த்தேன்.
அப்போது தான் இவ்வளவு பெரிய பரிசு விழுந்தது என தெரிந்தது. இந்த விடயத்தை உடனடியாக என் மனைவிக்கு தெரிவித்தேன்.
எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த பரிசு பணத்தை வைத்து புதிய வீடு வாங்க திட்டமிட்டுள்ளேன்.
மேலும், எங்கள் முக்கிய முன்னுரிமை பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்து எங்கள் மகள்களை நிதி ரீதியாக பாதுகாப்பாக வைப்பது தான் என கூறியுள்ளார்.