திமுக கட்சியின் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவருக்கு திடீரென ஏற்பட்ட சளித்தொல்லை காரணமாக காவேரி வைத்தியசாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த முதலாம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சையின் பின்னர் கடந்த 7ஆம் திகதி வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் தற்போது உடல்நல குறைவு காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு அவசர சிக்ச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சைகள் வழங்கப் பட்ட வருவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.