ஹம்பாந்தோட்டை சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் உரிய முறையில் முறைப்பாடு செய்யவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்றைய தினம் கடற்படை தளபதி பிரதமரை சந்தித்த சந்தர்ப்பத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுகத்தில் கடற்படைத் தளபதி ஊடகவியலாளரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் தவறான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முறைப்பாடு செய்திருந்தால் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி நவடடிக்கை எடுக்கப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஓர் கடற்படை முகாமை அமைக்குமாறும் துறைமுகத்தின் பதுகாப்புப் பணிகளை கடற்படையினர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமெனவும் பிரதமர், கடற்படைத்தளபதிக்கு பணித்துள்ளார்.