தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக அரசாங்கம் ஒதுபோதும் அறிவிக்கவில்லை என அரசாங்கத்தின் முன்னாள் ஊடக பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடல் ஒன்று மாத்திமே நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளை விடுவிப்பதாக யார் கூறியது? கலந்துரையாடப்பட்ட போதும் விடுவிக்கப்படடவில்லையே. நாம் தெளிவான ஒரு நிலைப்பாட்டிலேயே உள்ளோம்.
இந்த நாட்டில் ஏதாவது அதிகார பகிர்வு அப்படி இல்லை என்றால் மூன்றில் இரண்டு வேண்டும் என்றால் அது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளலாம்.
எனினும் இரகசிய ஒப்பந்தங்கள், அப்படி இல்லை என்றால் போலி அரசியலமைப்புகளை கொண்டு வந்து புலம்பெயர் செயற்பாட்டார்களின் தேவைக்காகவும் தமிழ் இனவாதிகளின் அவசியத்திற்கமையவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படாதென்பதனை நாம் கூற வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கெஹேலிய ரம்புக்வெல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.