இலங்கையில் கடந்த வாரம் போன்று அடுத்த வாரமும் அரச மற்றும் தனியார் துறைகளின் பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளையதினம் முதல் பணிக்காக செல்வதற்கு கோரிக்கைகள் அதிகரித்துள்ளமையினால் அலுவலக ரயில்கள் 19 வரை அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான சூழலில் ரயில் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 11500 வரை அதிகரித்துள்ளது.
ஊரடங்கு சட்டம் காரணமாக சேவை வழங்குவதனை நிறுத்தியிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், சில கட்டுப்பாடுகளுடன் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதியினுள் சேவை பெற்றுக் கொள்வதற்காக தொலைபேசியில் அழைத்து நேரம் ஒன்றை ஒதுக்கிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை காலை 5 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.