சந்தித்தவர்களிடம் சிந்தித்துப் பேச வேண்டிய நாள். உறவினர்கள் வழியில் சுபச் செலவுகள் ஏற்படலாம். தொழில் தொடர்பான பயணங்களை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது.
நண்பர்களால் நல்ல காரிய மொன்று நடைபெறும் நாள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். புதிய தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உள்ளன்போடு பழகியவர் களின் எண்ணிக்கை அதிகரிக் கும். தேகநலன் கருதி ஒருசிறு தொகையைச் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். நிலையான வருமானத் திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகளின் தொடர்பு அனுகூலம் தரும்.
எதிலும் முன்னிலை வகிக்கும் நாள். சாமர்த்தியமான பேச்சுக்க ளால் சாதனை படைப்பீர்கள். தாய் வழி உறவினர்களின் சந்திப்பு கிட்டும். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.
சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். கொடுக் கல்–வாங்கல்களில் ஏற்பட்ட குளறுபடிகள் அகலும். புதிய முயற்சிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
எண்ணம் போல் எல்லாம் நடைபெறும் நாள். இதுவரை வராத உறவினர்கள் சிலர் உங்களின் இல்லம் தேடிவரும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க முன்வருவீர்கள்.
மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி கூடும் நாள். விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் உருவாகும்.
போட்டிகளைச் சமாளித்து புகழ் காணும் நாள். திடீர் செலவுகள் இருந்தாலும், அதை ஈடு செய்ய புதிய வரவுகள் வந்து சேரும். தந்தை வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். பணவரவு மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் செல்வாக்கு மேலோங்கும். இளைய சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும்.
அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும் நாள். வீட்டு பராமரிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் பெயரும், புகழும் கூடும்.
இடமாற்றம் பற்றிய இனிய செய்தி வந்து சேரும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அலைச்சல்களை சந்திக்க நேரிடும். வரவு போதுமானதாக இருக்கும்.