மே 18-ம் நாள் உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் துக்க நாளாகும் என இசையமைப்பாளர் டி.இமான் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர் 2009-ம் ஆண்டு மே 18-ம் நாள் முடிவுற்றதாக அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்தார். இறுதி யுத்தத்தின் போது சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள், தளபதிகள் உள்ளிட்டோரும் இந்த யுத்தத்தில் உயிரிழந்தனர். முள்ளிவாய்க்கால், நந்திக்கடலில் யுத்தம் முடிவடைந்தது. எனவே ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மே மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஆங்காங்கே தீபங்கள் ஏற்றி மலர் தூவி போரில் உயிரிழந்தவரகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் 11-ம் ஆண்டு நினைவையொட்டி பிரபல இசையமைப்பாளர் டி.இமான் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
“மே18 உலகம் முழுக்கவுள்ள தமிழர்களின் துக்க நாளாகும். தங்களுடைய வாழ்வைத் தியாகம் செய்த வீரத்தமிழர்களுக்கு வீர வணக்கம். வாழ்க தமிழ், வாழ்க மனிதம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
May 18th A day of deep grief for Tamils around the globe. Royal salute to all Veerathamizhargal who had sacrificed their lives.
வாழ்க தமிழ்!
வாழ்க மனிதம்!
– D.Imman pic.twitter.com/3lmxt8M3IP— D.IMMAN (@immancomposer) May 18, 2020