தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் திகதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவர் இறந்ததில் இருந்து அவர் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழும்புவதாக திரைப்பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல வாரநாளிதழுக்கு சொந்தமான இணையத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை அப்பல்லோ மருத்துவர்கள் சிலர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள் கூறுகையில், ஜெயலலிதா உடல் நிலை நன்றாக முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததால், மருத்துவ நிர்வாகம் அவருக்கு அவசர சிகிச்சை பிரிவிலே தனி அறை ஒன்றை அமைத்து தந்ததாகவும், அதன் பிறகு ஜெயலலிதாவுக்கு மருத்துவ ரீதியான கவனிப்புகள் குறைந்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும் ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டது ஒரு நர்ஸ் சொன்ன பின்பு தான் மருத்துவர்களுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது.
அதன் பின் நோயாளியை காப்பாற்ற உதவும் கோல்டன் டைம் என்று கூறப்படும் அந்த 10 நிமிடமும் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு மூக்கு வழியாக உணவுக் குழாயும், தொண்டை வழியாக டிரயாக்யோஸ்டமி என்ற செயற்கை சுவாச கருவி இணைக்கப்பட்டிருந்ததால், தனக்கு ஏற்பட்ட இதய பாதிப்பை ஜெயலலிதா சொல்ல முடியாமல் துடிதுடித்தாகவும், அதன் பின் 10 நிமிடம் கழித்து அவரது அறைக்கு அருகே இருந்த 208 எண் கொண்ட அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்ற மருத்துவர்கள், அவரது உயிரை காக்க போராடியதாகவும் தெரிவித்துள்ளனர்.
அப்போது ஜெயலலிதாவை எக்மோ என்ற இயந்திரத்தில் இணைக்க முயற்சி செய்த போது, சீனியர் மருத்துவர் ஒருவர் ஜெயலலிதாவின் ரத்தக் குழாய் ஒன்றை அவசரத்தில் சேதப்படுத்திவிட்டாராம், அதனால் ஜெயலலிதாவுக்கு ஏராளமான இரத்தங்கள் வீணாகியதோடு மட்டுமில்லாமல், அதை சமாளிக்க அப்பல்லோவின் மருத்துவ ரத்த வங்கியில் இருந்து புதிய இரத்தம் கொண்டு வந்து ஜெயலலிதாவுக்கு ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இத்தகைய தவறுகளால் ஜெயலலிதாவின் உடல்நிலை சரி செய்ய முடியாத நிலைமைக்கு சென்று விட, ஒரு கட்டத்தில் மூளையைத் தவிர அனைத்து உறுப்புகளும் செயல் இழந்து விட்டதாம், 4ம் திகதியே ஜெயலலிதா இந்த நிலைமைக்கு வந்து விட்டாலும், மறுநாள் 5 ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு தான் எய்ம்ஸ் மருத்துவர்களும், சசிகலாவும் முடிவு செய்து அறிவித்ததாக கூறப்படுகிறது.