நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு திடீர் திருமண ஏற்பாடுகள் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வரலக்ஷ்மிக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்ட மாப்பிள்ளை இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும விராட் கோஹ்லி ஆகியோருக்கு மாப்பிள்ளை க்ளோஸ் ஃபிரண்ட் என்றும் கூறப்படுகிறது.
வரலக்ஷ்மியின் குடும்பம் மாப்பிள்ளையின் குடும்பமும் பல ஆண்டுகளாக நண்பர்களாம்.
இந்நிலையில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த குடும்பத்தார் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் இந்த தகவல் குறித்து வரலக்ஷ்மியின் தரப்பு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.