ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் இடையே சாம்சங் நிறுவனத்தின் செய்திகள் ஆண்டு முழுவதும் பரபரப்பாக ஓடிக் கொண்டே இருக்கின்றது.
குறிப்பாக இந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி 7 மாடலின் பேட்டரி வெடிப்பு, அதனால் ஏற்பட்ட சேதங்கள், அதன் பின்னர் கேலக்ஸி 8 மாடலின் வரவு ஆகிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அடுத்ததாக சாம்சன் நிறுவனம் எடுக்கவுள புதிய அவதாரம் குறித்த செய்திகள் பரபரப்புடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
அதாவது ஃபோல்டர் டைப்பில் இரண்டு டிஸ்ப்ளேவுடன் கூடிய ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
பேடிஎம் – வங்கி : பண பரிமாற்றம் நிகழ்த்துவது எப்படி.? இரண்டு சிம், இரண்டு கேமிரா, ஆகியவை பொருந்திய ஸ்மார்ட்போன்களை அடுத்து தற்போது இரண்டு டிஸ்ப்ளே கேமிராவை ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் உபயோகித்து மகிழலாம்.
இரட்டை டிஸ்ப்ளே குறித்த ஸ்மார்ட்போன் அறிவிப்பை சாம்சங் நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் ET News செய்திகளின்படி இந்த ஸ்மார்ட்போனுக்கான ஆரம்பகட்ட பணிகளை சாம்சங் தொடங்கிவிட்டது.
இதுகுறித்த முறையான அறிவிப்பை வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள கன்ஸ்யூமர் எலக்டரானிக் ஷோவில் அல்லது பிப்ரவரியில் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் உலக மொபைல் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
மேலும் இந்த இரட்டை டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் ஒரு புத்தகம் போல் மூன்று அடுக்குகளாக வரும் என்றும் இதன் காரணமாக இரண்டு டிஸ்ப்ளேக்களும் டேமேஜ் ஆகாமல் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் முதல்கட்டமாக இந்த இரட்டை டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்கள் குறைந்த அளவே தயாரிக்கப்பட்டு சந்தையில் அறிமுகம் செய்யவிருப்பதாகவும், இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் தரும் ஆதரவை பொருத்து அதன் பின்னர் அதிக அளவில் தயாரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.