அப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி…
அன்று 2015 ஜூலை 30ஆம்தேதி கலாம் அவர்களுக்காக நடைபெற்ற கடையடைப்பு அன்று அப்துல்கலாம் அவர்களது நல்லடக்கம் நடந்துகொண்டிருந்தது.
தெருவில் பெருத்த இரைச்சலும், மகிழ்ச்சி ஆரவாரமும் கேட்டது. என்ன ஏதென்று வெளியில் வந்து பார்த்தால். அங்கே பேண்டு வாத்தியங்களும் நாதஸ்வரம் தவில் முழக்கத்தோடும் அணி வகுப்பு நடத்திக்கொண்டிருந்தனர். அவர்களை தடுத்தி நிறுத்தி என்ன விஷயம் என்று கேட்டால். அதற்கு அவர்கள் அப்துல் கலாம் எங்கள் முதல் எதிரி அவர் இறந்துவிட்டார் அதனால்தான் மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த அணிவகுப்பை நடத்தி, கொண்டாடி வருகிறோம் என்றார்கள்.
அதிர்ச்சியில், உலகமே போற்றும் உன்னத மனிதர் மறைந்துவிட்டார் என்ற துக்கத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் துக்கத்தில் சோகத்தில் மூழ்கி இருக்கும் இந்த நிலையில் அப்துல் கலாம் தான் உங்கள் முதல் எதிரி என்று சொல்கிறீரே நீங்கள் யார் என்று கேட்டபோது.
அந்த சிறு கூட்டத்தில் இருந்த 8 பேர் ஒரு குழுவாக வந்து வரிசையாக நின்று ஒவ்வொருவரும் அதற்கான காரணத்தை தெரிவித்தனர்.
1.ஆணும் பெண்ணுமாய்வந்த இரட்டையர்களில் ஒருவர்.
நான் கல்லாமை, இவள் அறியாமை, கலாம் எங்களை அவரிடம் நெருங்கவிடவே இல்லை அதனால் தான் நாங்கள் அவரை எங்கள் எதிரி என்கிறோம் என்றார்கள்.
2. என் பெயர் சோம்பல்:
என்னோடு அவர் ஒரு விநாடி கூட செலவழித்தது கிடையாது அதனால்தான்…
3. கோவம் (சினம்):
நான் அவரது கண்களிலும் உதடுகளிலும் அவ்வப் போது வெளிப்பட்டு ஆதிக்கம் செய்ய முற்பட்டாலும் என்னை அவர் என் தலையில் தட்டி அடக்கிவிடுவார். அதனால்தான்…
4.அகங்காரம்:
நான் அவரது மூளையை சர்வாதிகாரம் செய்ய நினைத்தேன் அதற்கு அவர் என்னை அனுமதிக்கவில்லை அதனால்தான்…
5. அதிகாரம்:
நான் ஏழைகளையும் எளியவர்களை ஆட்டிப் படைத்திருக்கிறேன். ஆனால் கலாம் என்னை ஆட்டிப்படைத்து அதிகாரம் செய்து விட்டார் அதனால்தான் …
6. பணம்:
நான் பல தலைகளில் கிரீடங்களாக அலங்கரித்திருக்கிறேன். ஆனால் அவரோ என்னை தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டார். அதனால் தான் ..
7. பதவி:
சுக போகங்களையும் சலுகைகளையும் அனுபவிக்கச் சொன்ன போதும் எனது பேச்சை துளியும் மதிக்காமல் எளிமைக்கு உற்ற நண்பனாக இருந்துவிட்டார் அதனால்தான் ..
8. ஓய்வு:
அவருக்கு என்னை யாரென்றே தெரியாது? மேலும் என்னை தெரிந்து கொள்ள எந்த முயற்சி எடுக்கவில்லை அதனால்தான்…
அப்துல்கலாம் அவர்கள் கண்ட கனவு நனவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.