சுவிட்சர்லாந்தின் அப்பென்செல் மண்டலத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு சுற்றுலா பயணிகளுக்கு, நாடு முழுவதும் பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளும் சலுகையை அறிவித்துள்ளனர்.
அப்பென்செல் மண்டலத்தில் செயல்படும் ஹொட்டல்களில் 3 இரவுகள் அல்லது அதற்கு மேல் தங்கிச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த இலவச பொது போக்குவரத்து பயணச் சலுகையை அறிவித்துள்ளனர்.
மட்டுமின்றி சுற்றுலா பயணிகளின் உடமைகள் அனைத்தையும் இலவச போக்குவரத்தில் உட்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த இலவச பயணத் திட்டமானது புதிதல்ல என கூறும் அப்பென்செல் சுற்றுலாத்துறை, ஆனால் முதல் முறையாகவும் மற்றும் அசாதாரண திட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அப்பென்செல் மண்டலத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களில் செயல்படும் அனைத்து ஹொட்டல்களிலும் இச்சலுகை அமுலில் இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
கொரோனா நெருக்கடிகளில் இருந்து மீண்டு, சுற்றுலா பயணிகல் அப்பென்செல் மண்டலத்தின் இயற்கையை ரசிக்க வேண்டும் என்பதற்காகவே இச்சலுகை என தெரிவித்துள்ள சுற்றுலா நிர்வாகம்,
இன்னொருபக்கம், இயற்கையை பாதுகாக்கும் பொருட்டு, கார் உள்ளிட்ட தனிப்பட்ட வாகனங்களை தவிர்த்து, சுற்றுலா பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் முழுவதும் பொது போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ளும் இச்சலுகையானது 2020 டிசம்பர் இறுதியுடன் காலாவதியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அப்பென்செல் மண்டலத்தில் ஹொட்டல் ஒன்றை பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள், உடனடியாக சுற்றுலாத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால்,
பதிவு செய்த ஹொட்டலுக்கு வருவதற்கும், அங்கிருந்து திரும்ப செல்வதற்குமான ரயில் போக்குவரத்து பயணச் சீட்டையும் இலவசமாக வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.