கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, சில்லரை மற்றும் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்திய பிறகு கைகளைக் கழுவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தனர்.
தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கட்டாயமாக மாஸ்க் அணிவது, சமூக விலகலை அனைத்து இடங்களிலும் கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவுவது உள்ளிட்ட பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, சில்லரை மற்றும் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவும் என்பதற்கான சான்றுகள் இதுவரை இல்லை என்றபோதிலும் ஒருவரின் சுவாசத் துகள்கள் அவற்றில் படிந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
எனவே சில்லரை மற்றும் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும் என சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
அதேபோல், கொரோனா நுண் கிருமி தொற்றைத் தடுக்க பொது இடங்களுக்குச் செல்லும்போது ரப்பர் கைக் கவசம் அணிவதை விட, அடிக்கடி கை கழுவுவதினால் மட்டுமே கொரோனா நுண்கிருமி தொற்றைப் பரவாமல் தடுக்க முடியும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.