கொரோனா நோயாளிகள், மன நல கோளாறுகளால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லண்டன் பல்கலைகழக ஆய்வாளர்கள் ‘த லான்செட் சைக்கியாட்ரி’ இதழில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
அந்த ஆய்வறிக்கையில்,
கொரோனா நோயாளிகளில் நான்கில் ஒருவர் மனப் பிரமை பிரச்னைக்கு ஆளாகிறார். இது, வழக்கமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்படுவது தான். எனினும், இந்த பிரச்சனை ஒருவரின் உயிரைப் பறிக்க அல்லது குணமடைவதை தாமதிக்க காரணமாக இருக்கிறது.
கொரோனா சிகிச்சைக்குப் பின் குணமானோருக்கு தீவிர மன அழுத்தம், மன உளைச்சல், பதற்றம் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் இருக்கலாம். அதே நேரத்தில் மனப் பிரமை, குழப்பம், ஞாபக மறதி பிரச்னைகளை கொரோனா நோயாளிகள் சந்திப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா நோயாளிகள் தனிமையில் வைக்கப்படுகின்றனர். அதுதான், அவர்களின் மனநல பாதிப்பிற்கு காரணமாக அமைகிறது. அதனால் அவர்கள் ‘வீடியோ’ மூலம் தங்கள் சுற்றத்தாரை காணவும், பேசவும் வசதி செய்தால் மன நலம் மேம்படும் சாத்தியக் கூறு உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.