உலகின் முன்னணி சமூக வலையமைப்பான பேஸ்புக் நிறுவனம், போலித் தகவல்களை பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய புதிய வசதி ஒன்று பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பேஸ்புக்கில் பதிவாகும் பதிவுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யும் வசதி தற்போது பேஸ்புக் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் சில போலித் செய்திகள் பேஸ்புக் ஊடாக பதிவேற்றப்படுவதாக பயனர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம், கடந்த மாதம் பரவலாக அதன் பயனர்களால் விமர்சிக்கப்பட்டது.
போலி செய்திகளை தடுக்கும் நோக்கில் புதிய அம்சங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பேஸ்புக் வழிமுறைகள் எதிர்காலத்தில் மாற்றமடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போலி செய்திகளை சேர்ப்பதற்காக “it’s a fake news story” என்ற அம்சத்தை சேர்க்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.