ஜான்சன் & ஜான்சன் குழந்தைகள் பவுடர் புற்றுநோயை உருவாக்குவதாக ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையிலிருக்கும் நிலையில், கனடா மற்றும் அமெரிக்காவில் அதன் விற்பனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், கனடா மற்றும் அமெரிக்காவில் தன் குழந்தைகள் பவுடர் விற்பனையை முடித்துக்கொண்டுள்ளது.
என்றாலும், பிற நாடுகளில் குழந்தைகள் பவுடர் விற்பனை தொடரும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
தென் அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் குழந்தைகள் பவுடர் மீதான ஆர்வம் குறைந்து வருவதையடுத்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பவுடரை பெண்கள் பயன்படுத்துவதால் அவர்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படும் என்றும், அதிலுள்ள ஆஸ்பெஸ்டாஸ் துகள்களை சுவாசிப்பதால், நுரையீரலையும் மற்ற உள்ளுறுப்புகளையும் பாதிக்கும் mesothelioma என்னும் புற்றுநோய் ஏற்படுவதாகவும் அந்நிறுவனம் மீது 19,400 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஆனால், தனது நிறுவன குழந்தைகள் பவுடர் பாதுகாப்பானது என்றும், அது புற்றுநோயை உருவாக்குவதில்லை என்றும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.