கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் தரித்து நிற்கும் வாகனங்களுக்கு நாளை (21) முதல் மீண்டும் தரிப்பிடக் கட்டணம் அறவிடத் தீர்மானித்துள்ளதாக, மாநகர சபை ஆணையாளர் திருமதி ரொஷானி திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவல் காரணமாக நடைமுறையிலிருந்த ஊரடங்குச் சட்ட உத்தரவு காலத்தில், கொழும்பு மாநகர சபையால் பராமரிக்கப்படும் நகர வீதிகளின் தரிப்பிட கட்டணத்தை வசூலிக்க கொழும்பு மாநகர சபை, தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது.
கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி இது தொடர்பில், அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்த கொழும்பு மாநகர சபை, தற்போதைய நிலையில் வாகன தரிப்பிட கட்டணத்தை அறவிட எந்தவொரு நபருக்கோ, நிறுவனத்திற்கோ அனுமதி வழங்கவில்லை என தெரிவித்திருந்தது.
இது தொடர்பில் மாநகர சபை வெளியிட்டுள்ள அறிவித்தல்,
கொவிட் (9 (COVID19) நோய்ப்பரம்பலை தொடர்ந்து நாட்டின் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில். கொழும்பு நதரின் வீதிகளில், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள தரிப்பிட கட்டணத்திற்கான வசூலை 2020 மே 21ஆம் திகதி முதல் அமுல்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி கீழே குறிப்பிடப்பட்ட கட்டணங்களிற்கு அமைவாக தரிப்பிடக் கட்டணங்களை செலுத்துமாறு பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகிறது.